உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 5 ஆண்டுகளுக்கு பின் பதவி உயர்வு செவிலியர் கூட்டத்தில் வலியுறுத்தல்

5 ஆண்டுகளுக்கு பின் பதவி உயர்வு செவிலியர் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஈரோடு: தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர் சங்க மாநில, மாவட்ட நிர்-வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் இந்திரா தலை-மையில் ஈரோட்டில் நடந்தது. மாநில துணை தலைவி வெற்றி-செல்வி, மாவட்ட செயலாளர் வித்யா, மாவட்ட பொருளாளர் தவுலத் முன்னிலை வகித்தனர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை முன்பு போலவே, சமூக நலத்துறையே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள், 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், கிராம சுகாதார செவிலியர்களுக்கு, 30 ஆண்டுகளுக்கு பின்னரே பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதனால் ஊதிய முரண்பாடு ஏற்படுகிறது. இதை தமிழக அரசு களைய வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மாநில செயற்குழுவை கூட்டி, அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பு வெளியிடுவது என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்