உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குருநாதபுரத்தில் குடிநீர் கேட்டு மறியல்

குருநாதபுரத்தில் குடிநீர் கேட்டு மறியல்

பவானி : வெள்ளித்திருப்பூர் அருகே, 15 நாட்களாக குடிநீர் வராததால், ஆத்திரமடைந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள குருநாதபுரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, 15 நாட்களுக்கும் மேலாக போர்வெல் தண்ணீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து சங்கரப்பாளையம் பஞ்., நிர்வாகத்தில் பல முறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். பஞ்., தலைவர் குருசாமி, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேச்சுவார்த்தை நடத்தினர்.விரைவில் பேர்வெல் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறவே கலைந்து சென்றனர். இதனால் குருநாதபுரம்-சுமைதாங்கி ரோட்டில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்