உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பல்சர் பைக்குகள் மோதி வாலிபர் பரிதாப பலி

பல்சர் பைக்குகள் மோதி வாலிபர் பரிதாப பலி

அந்தியூர், அந்தியூர், சிவசக்தி நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன், 22: இவர் இதே பகுதியில் குடும்பத்தினருடன் இருந்து பூக்கள் கட்டும் வேலை செய்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, அந்தியூர்-அத்தாணி சாலையில், தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பஸ் ஸடாப் அருகே இவர் பல்சர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்திசையில் இருந்து வந்த மற்றொரு பல்சர் பைக், ரோட்டை கடக்க முயன்ற போது, பாலச்சந்திரன் பைக் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்ட பாலச்சந்திரனை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ