உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெட்ஷீட் சுற்றிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

பெட்ஷீட் சுற்றிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

பவானி: சித்தோடு அருகேயுள்ள ஆர்.என்.புதுார், காளிங்கராயன் நகரில் வாடகை வீட்டில் வசித்தவர் நந்தகுமார், 72; இவரது மனைவி கிருஷ்ணா பாய், 68; குடும்ப பிரச்னையால் காளிங்கராயன் நகரில் வாடகை வீட்டில் நந்தகுமாரும், ஜவுளி நகரில் உள்ள வீட்டில் கிருஷ்ணா பாயும் தனியாக வசித்து வந்தனர். இருவரையும் வீட்டிலிருந்தபடியே ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வரும் மகன் மோத்தி, 44; கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, நந்தகுமார் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்தனர். நந்தகுமார் இறந்த நிலையில், பெட்ஷீட்டால் சுற்றுப்பட்டு கிடந்தார். அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற சித்தோடு போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். * கோபி அருகே கூடக்கரையில், செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான கிணற்றில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக, கடத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுண்டப்பாளையம் வி.ஏ.ஓ., செல்வன் புகாரின்படி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்