சிறுவாணி இலக்கிய திருவிழா
ஈரோடு: ஈரோடு மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் சார்பில், 'சிறுவாணி இலக்கிய திருவிழா'வில் பல்வேறு போட்டி நடத்தப்-பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற, 90 மாணவ, மாணவிய-ருக்கு, 3.60 லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசு வழங்கி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: தமிழ் இலக்கியங்களை இன்-றைய மாணவ, மாணவியர் அறிந்து கொள்ள, இந்நிகழ்ச்சி நடத்-தப்படுகிறது.முதல்வர் தலைமையில் முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடந்தது. அது-போல, ஈரோடு மாவட்டத்திலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டது. இதுபோல, சிறுவாணி இலக்கிய திருவிழா நடத்தப்பட்டு, பேச்சரங்கம், கருத்தரங்கம், வினாடி வினா போட்-டிகள் நடத்தப்பட்டது. மாணவ, மாணவியரிடம் வாசிப்பு திறன், பழக்கத்தை அதிகரிக்க இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்படுகி-றது. இவ்வாறு பேசினார்.விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் அந்தியூர் வெங்கடாசலம், ஈரோடு கிழக்கு சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்-வராஜ், பொது நுாலக இணை இயக்குனர் இளங்கோ சந்திர-குமார், மாவட்ட நுாலக அலுவலர் யுவராஜ், எழுத்தாளர்கள் சிற்பி பாலசுப்பிரமணியம், நாஞ்சில் நாடான், ஸ்டாலின் குணசே-கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.