ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட, கலெக்டர் அலுவலகத்தில், ஈரோடு 46புதுார், சஞ்சை நகர் கோபாலகிருஷ்ணன், 28; கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனுத்தாக்கல் செய்தார். எம்.எஸ்.சி., பி.எட்., பட்டதாரியான இவர், ஆசிரியராக பணி செய்கிறார். சோளிய வேளாளர் வகுப்பை சேர்ந்தவர். திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளது. இவரது சொத்து மதிப்பு, 10,000 ரூபாய். இதேபோல் கோவை, வடமதுரையை சேர்ந்த முரளிகிருஷ்ணா மகள் கீர்த்தனா, 31; மனுத்தாக்கல் செய்தார். பி.இ., - எம்.எஸ்., படித்துள்ளார். நாயுடு வகுப்பை சேர்ந்தவர். இவரது சொத்து மதிப்பு, 20 லட்சம் ரூபாயாகும்.* பவானி லட்சுமி நகர், மேட்டுநாசுவம்பாளையத்தை சேர்ந்த விஜய்சூர்யா, 23, மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்து வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். சுய தொழில் செய்கிறார். சொத்து மதிப்பு, 20 லட்சம் ரூபாயாகும். * ஈரோடு ஆர்டிஓ சதீஷ்குமாரிடம், சிவகிரி, சாஸ்திரி வீதியை சேர்ந்த எல்.ரவிச்சந்திரன், 54, நேற்று மனுத்தாக்கல் செய்தார். ஆவின் நிறுவன தற்காலிக வேன் டிரைவர். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். எந்த அரசியல் கட்சியிலும் சேராதவர். மனைவி ரமாதேவி. மகன் தனியார் நிறுவன ஊழியர். சொத்து மதிப்பாக, 15 லட்சம் ரூபாய்க்கு காலியிடம் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். இதுவரை தொகுதியில், ஐந்து பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.