உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் புள்ளிமான் பலி

விபத்தில் புள்ளிமான் பலி

சென்னிமலை, சென்னிமலை வனப்பகுதியில் நுாற்றுக்கணக்கான மான்கள் கூட்டம், கூட்டமாக வசிக்கின்றன. சில நேரங்களில் பாதை மாறி நகர பகுதிகளுக்கு வந்து விடுவதுண்டு. இந்த வகையில் நேற்று முன்தினம் இரவு எம்.பி.என்., காலனி மேடு அருகில் சாலையை கடந்த ஒரு ஆண் புள்ளி மான், வாகனம் மோதியதில் இறந்து விட்டது. சென்னிமலை வனத்துறையினர் மான் உடலை மீட்டு, வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை