உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

புளியம்பட்டி: பவானிசாகர் பேரூராட்சி பகுதியில், 12.16 லட்சம் மதிப்-பீட்டில் நடந்து வரும் குடிநீர் திட்டப் பணிகளை கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, பவானிசாகர் பழைய மீன் பண்ணையில் மீன்குஞ்-சுகள் உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் பணிகளை ஆய்வு மேற்-கொண்டு, மீன் இனப்பெருக்க தொட்டி, நீர்தேக்கத் தொட்டி, மீன்-களுக்கு வழங்கப்படும் தீவனம் ஆகியவை குறித்து கேட்ட-றிந்தார். விண்ணப்பள்ளி ஊராட்சி, சுந்தரபுரம் பகுதியில் கலை-ஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ், ரூ.1.40 கோடி மதிப்-பீட்டில், 40 வீடுகள் கட்டப்பட்டு வருதையும், அண்ணேகவுண்-டன்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 4.99 லட்சம் மதிப்பீட்டில் குளம் கட்டப்-பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்-பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை