உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். சுரேஷ், சாமி தமிழ்செழியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சிவகுமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மணி, மாநில துணை தலைவர் அருள் சுந்தரரூபன், ரஞ்சிதம் பேசினர். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஊதியத்தில் தாமாகவே மாதம் தோறும் வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிடவும் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி