உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா ஜோர்

தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா ஜோர்

ஈரோடு: அவல்பூந்துறை அருகே பிரசித்தி பெற்ற தென்னக காசி பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா, விமரிசையாக கொண்டா-டப்படுகிறது. இந்நிலையில் தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று, காசி பைரவர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். ஆண், பெண் உள்ளிட்ட அனைவரும் கருவறைக்குள் சென்று, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு, தங்கள் கைகளால் பாலாபி-ஷேகம் செய்து வழிபட்டனர். இதை தொடர்ந்து ஆன்மீக குரு விஜய் சுவாமிஜி தலைமையில், பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. அதேபோல், 39 அடி உயரம் கொண்ட கால பைரவர் சிலைக்கும் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை