உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் பற்றி அவதுாறு: யூடியூபர் மீது புகார்

கோவில் பற்றி அவதுாறு: யூடியூபர் மீது புகார்

காங்கேயம், வெள்ளகோவிலில் பிரசித்தி பெற்ற கோவிலாக வீரக்குமாரசாமி கோவில் திகழ்கிறது. இக் கோவிலை பற்றி ஒரு யூ-டியூப் சேனலில் இழிவாக பேசியதாக, கோவிலை சேர்ந்த, 11 குலத்து மக்கள் சார்பில், வெள்ளகோவில் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: எங்களது சமூகத்தினர் மனம் புண்படும்படி எங்கள் குலதெய்வத்தை கேவலப்படுத்தி, எங்களின் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தி, கோவில் வரலாற்றை இழிவுபடுத்தி பேசியும், இதிகாசத்தை பொய், புரட்டாகவும் பேசி மதக்கலவரத்தை துாண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை