உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலுக்கு சென்ற கணவன் தாய் வீட்டில் பெண் விபரீதம்

கோவிலுக்கு சென்ற கணவன் தாய் வீட்டில் பெண் விபரீதம்

சென்னிமலை: சென்னிமலை, ஊத்துக்குளி சாலை, சரவணா நகரை சேர்ந்தவர் செல்வி. இவரின் இளைய மகள் ஷாலினி, 24; இவரின் கணவர் சென்னிமலை, ஈங்கூர் சாலை, சிந்து நகரில் வசிக்கும் கவின்குமார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஆறு மாத பெண் குழந்தை உள்ளது. கவின்குமார் கோவையில் தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில் திருச்செந்துார் கோவிலுக்கு கவின்குமார் சென்றதால், குழந்தையுடன் சரவணா நகரில் உள்ள தாய் வீட்டுக்கு ஷாலினி நேற்று முன்தினம் வந்தார். நேற்று காலையில் ஷாலினி வீட்டில் துாக்கு போட்டு தொங்கியுள்ளார். இதைப் பார்த்த செல்வி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு பார்த்தபோது இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து சென்னிமலை போலீசில், செல்வி புகார் செய்தார். போலீசார் ஷாலினி உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். கணவர் கோவிலுக்கு சென்ற நிலையில், மனைவி தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை