உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்தியா நிட்பேர் கண்காட்சி செப்.,4ல் துவக்கம்

இந்தியா நிட்பேர் கண்காட்சி செப்.,4ல் துவக்கம்

திருப்பூர்: சர்வதேச பின்னலாடை கண்காட்சியான, 51வது 'இந்தியா நிட்பேர்' (ஐ.கே.எப்.,) கண்காட்சி, செப்., 4ல் துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.திருப்பூர் ஐ.கே.எப்., அசோசியேஷன், திருப்பூர் ஏற்றுமதியா-ளர்கள் சங்கம், ஆயத்த ஆடைஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் ஆண்டுக்கு இருமுறை, ஐ.கே.எப்., கண்காட்சி நடத்தப்ப-டுகிறது. திருமுருகன்பூண்டியில் உள்ள, ஐ.கே.எப்., வளாகத்தில், ஆறு மாத இடைவெளியில், கண்காட்சி நடத்தப்படுகிறது.அதன்படி, வசந்தகால ஆடைகளுக்கான, 51வது 'இந்தியா நிட்பேர்' சர்வதேச பின்னலாடை கண்காட்சி, வரும் செப்., 4ம் தேதி துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள கண்காட்-சியில், கோடை் மற்றும் குளிர்கால ஆர்டர்களுக்கான சிறப்பு வாய்ந்த ஆடைகள், 'பேப்ரிக்' துணி ரகங்கள், ஆடை உற்பத்திக்-கான 'அசசரீஸ்', ஆயத்த ஆடைகள், நுாலிழைகள் காட்சிப்படுத்-தப்பட உள்ளன.ஒவ்வொரு கண்காட்சியும், ஒவ்வொரு ஜவுளி தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது. அதன்படி, உலக அளவி-லான சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கோட்பாட்டை கருத்தில்-கொண்டு, 51வது கண்காட்சி நடத்தப்படுகிறது. இது, பசுமை சார் உற்பத்தி அடிப்படையிலான, புதிய பேஷனை கட்ட-மைக்கும் என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை