உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பட்டா கொடுத்து 10 ஆண்டா நிலம் ஒதுக்காத அவல நிலை

பட்டா கொடுத்து 10 ஆண்டா நிலம் ஒதுக்காத அவல நிலை

ஈரோடு: பட்டா வழங்கி, 10 ஆண்டுகளாகியும் நிலம் ஒதுக்காததால், கிராம மக்கள் பரிதவிக்கின்றனர்.சத்தியமங்கலம் அண்ணா நகர், வடக்குப்பேட்டையில் வருவாய் துறைக்கு சொந்தமான காலி இடத்தை வீடற்ற ஏழைகளுக்கு, 2014ல் இலவச வீட்டுமனை பட்டாவாக வழங்கினர். மொத்தம், 30 பேருக்கு பட்டா கிடைத்தது. அவ்விடத்தின் ஒரு பகுதியை, சத்தி அரசு கலை கல்லுாரிக்கு நிலம் கையகப்படுத்தியபோது, அதிகாரிகள் வழங்கி விட்டனர். இதனால் மீதியுள்ள இடத்தில், அளவீடு செய்து நிலத்தை பிரித்து தருவதாக கூறினர். இதுவரை அளவீடு செய்து தரவில்லை. இதனால் நிலத்தை அளவீடு செய்து வழங்க கோரி, தாசில்தார், கோபி ஆர்.டி.ஓ., ஆகியோரிடம் பல முறை மனு வழங்கியும் பலனில்லை. இந்நிலையில் நிலம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பெண்கள், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், நேற்று மனு வழங்கி விளக்கினர். தங்களுக்கு பட்டா வழங்கியபோது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை அளவீடு செய்து வழங்குமாறு வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை