உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெண் போலீசிடம் ரகளை: மப்பு வாலிபர் கைது

பெண் போலீசிடம் ரகளை: மப்பு வாலிபர் கைது

ஈரோடு, ரோடு-மேட்டூர் சாலை, முனிசிபல் காலனி பிரிவில், 25ம் தேதி மாலை வடக்கு போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ., ரேணுகா பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரே மொபட்டில் வந்த மூவரை மடக்கி பிடித்தார். உரிய ஆவணங்களை காட்டுமாறு கேட்கவே, குடிபோதையில் இருந்த மூவரும், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகாத வார்த்தை பேசிய ஒரு வாலிபர்,சட்டையை கழற்றி சாலையில் படுத்து உருண்டார். இதை படம் பிடிக்க முயன்ற ரேணுகாவின் மொபைல்போனை தட்டி விட்டார். இதை பார்த்த மக்கள் வாலிபரை பிடித்தனர். போலீஸ் விசாரணையில், ஈரோடு, கணபதிபாளையத்தை சேர்ந்த யோகேஷ், 25, என்பது தெரிந்தது. மொபட்டை பறிமுதல் செய்து, மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து, யோகேஷை கைது செய்தனர்.மின் அலுவலகம் இடமாற்றம்ஈரோடு, ஜூன் 28-ஈரோடு மின் பகிர்மான வட்டம், கருங்கல்பாளையம் பிரிவு அலுவலகம் வரும் ஜூலை, 1 முதல் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி கருங்கல்பாளையம் பிரிவு அலுவலகம், க.எண்: 20/187 - ஆர்.கே.வி., சாலை, மணிக்கூண்டு அருகே, மோகன் டெக்ஸ் எதிரில் செயல்படும். இத்தகவலை ஈரோடு நகரியம் செயற்பொறியாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை