உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விஷ மாத்திரை தின்ற பெண் சாவு: 2 பேர் சீரியஸ்

விஷ மாத்திரை தின்ற பெண் சாவு: 2 பேர் சீரியஸ்

ஈரோடு, சிவகிரி, மேற்கு தாண்டாம்பாளையம், சச்சிதானந்தம் மனைவி ராஜேஸ்வரி, 46; கந்தசாமி பாளையத்தில் கணவருடன் ஓட்டல் கடை நடத்தி வந்தார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் சுமை அதிகமானதால் வாழ விருப்பமில்லை என்று கூறி வந்துள்ளார். கடந்த, 8ம் தேதி மதியம் சச்சிதானந்தம், ராஜேஸ்வரி, இவர்களின் மகள் பூஜாஸ்ரீ, சல்பாஸ் மாத்திரை தின்று விட்டனர். மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் மூவரும் சேர்க்கப்பட்டனர். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராஜேஸ்வரி, நேற்று காலை இறந்தார். தந்தை, மகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை