உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் இன்ஜின் மோதியதில் பெண் தொழிலாளி சீரியஸ்

ரயில் இன்ஜின் மோதியதில் பெண் தொழிலாளி சீரியஸ்

ஈரோடு;ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் நான்காவது பிளாட்பார்மில், தண்டவாளத்தில் துாய்மை பணியில், ஒப்பந்த தொழிலாளி சரஸ்வதி, 45, நேற்று காலை ஈடுபட்டிருந்தார். அப்போது சத்தமின்றி வேகமாக ரயில் இன்ஜின் வந்தது. நகர்ந்து செல்ல சரஸ்வதி முற்படுவதற்குள் இன்ஜின் மோதி விட்டது. இதில் அவரது வலது கால் துண்டானது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ