உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 11 மனு

மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 11 மனு

ஈரோடு :ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், துணை ஆணையர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.வீடு மற்றும் வணிக கடைகளுக்கு வரி குறைப்பு, சாலைகள் சீரமைப்பு, நில பிரச்னை, வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 11 மனுக்களை மக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற மேயர், அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி