உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 140 மது பாட்டில்கள் அந்தியூரில் பறிமுதல்

140 மது பாட்டில்கள் அந்தியூரில் பறிமுதல்

அந்தியூர், அந்தியூரில், சுதந்திர தினத்தன்று, சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.அந்தியூர் புதுப்பாளையத்தில், குருநாத சுவாமி கோவில் திருவிழா நடந்து வருகிறது. சுதந்திர தினத்துக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவிலுக்கு வரும் மது பிரியர்களுக்கு சரக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. புதுப்பாளையம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, பவானியை சேர்ந்த குணசேகரன், 49, என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. கைது செய்த போலீசார், அவரிமிடரிந்து 140 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை