உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதை பொருட்களை கடத்தி வந்த 145 வாகனங்கள் விரைவில் ஏலம்

போதை பொருட்களை கடத்தி வந்த 145 வாகனங்கள் விரைவில் ஏலம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத் தில், போதை பொருட்களை கடத்தி வந்த-தாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, 145 வாகனங்கள் விரைவில் ஏலத்தில் விடப்பட உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்களை கடத்தி, விற்க வந்ததாக ஈரோடு மாவட்ட மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரால் இதுவரை, 129 டூவீலர்கள், 16 நான்கு சக்கர வாக-னங்கள் என மொத்தம், 145 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்-டுள்ளன. ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாகனங்களை பொது ஏலம் விடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அரசு மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள், நேற்று வாகனங்களுக்கு விலை நிர்-ணயம் செய்யும் பணியை மேற்கொண்டனர். எனவே விரைவில் ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !