உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடிதந்தை, மகள் மீது 150 பேர் புகார்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடிதந்தை, மகள் மீது 150 பேர் புகார்

ஈரோடு, ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி, 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நுாற்றுக்கும் மேற்பட்டோர், எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தனர். ஈரோடு, வீரப்பன்சத்திரம் நேரு வீதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 61; எஸ்.பி., ஜவகரிடம் அளித்த மனுவில் கூறயிருப்பதாவது:ஈரோடு, கங்காபுரம், கொங்கம்பாளையம், எல்.வி.பி, நகரில் குடியிருந்து, வீரப்பன்சத்திரம், காவிரி ரோடு முருகன் வீதியில் தொழில் செய்து வரும் அழகர்சாமி, நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார். மகள் மாரியம்மாளுடன் சேர்ந்து சிறுசேமிப்பு ஏலச்சீட்டு நடத்துவதாகவும், நிறைய பேர் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் நான் மூன்று சீட்டு சேர்ந்தேன். தொகையை முறையாக செலுத்தினேன். கடந்த ஜன., மாதம் சீட்டு முடிந்தது. ஆனால் எனது சீட்டுத்தொகையான, ௪.௫௦ லட்சம் ரூபாய் தராமல் இழுத்தடிக்கிறார். அழகர்சாமி, மாரியம்மாள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.இதேபோல் அழகர்சாமி, மாரியம்மாள் மீது, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக, எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளிக்க நேற்று மாலை, 150 பேர் வந்தனர். ஏலச்சீட்டு மோசடி தொகை, 3 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று, புகார்தாரர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை