17 ஓட்டுச்சாவடி அமைவிடம் மாற்றம்
ஈரோடு, அக். 30-ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதியில், 959 ஓட்டுச்சாவடி அமைவிடத்தில், 2,222 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் பழுடைந்த, செயல்படாத கட்டடங்களில் அமையப்பெற்ற ஓட்டுச்சாவடிகளில், மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதன்படி ஈரோடு மேற்கில் பாகம் எண்: 292, பெருந்துறை தொகுதியில் பாகம் எண்:145 என, தலா ஒரு ஓட்டுச்சாவடி அமைவிடம், பவானிசாகர் தொகுதியில் பாகம் எண்கள்: 95, 109, 110, 111, 117, 118, 236, 237, 238, 239, 242, 243, 244, 247, 248 என, 15 ஓட்டுச்சாவடி அமைவிடங்கள் உட்பட, 17 ஓட்டுச்சாவடி அமைவிடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.இதன்படி ஈரோடு கிழக்கில் - 53 ஓட்டுச்சாவடி அமைவிடத்தில், 237 ஓட்டுச்சாவடியும், ஈரோடு மேற்கில், 103 இடத்தில், 302 ஓட்டுச்சாவடி, மொடக்குறிச்சியில், 146 அமைவிடத்தில், 277 ஓட்டுச்சாவடி, பெருந்துறையில், 153 அமைவிடத்தில், 264 ஓட்டுச்சாவடி, பவானியில், 123 அமைவிடத்தில், 289 ஓட்டுச்சாவடி, அந்தியூரில், 123 அமைவிடத்தில், 262 ஓட்டுச்சாவடி, கோபியில், 129 அமைவிடத்தில், 296 ஓட்டுச்சாவடி, பவானிசாகரில், 129 அமைவிடத்தில், 295 ஓட்டுச்சாவடி என மொத்தம், 959 அமைவிடத்தில், 2,222 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.