மேலும் செய்திகள்
1.3 டன் ரேஷன் அரிசி ஈரோட்டில் பறிமுதல்
23-Dec-2024
ஈரோடு: ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசார், ஈரோடு சாஸ்திரி நகரில் நேற்று ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். ஒரு வீட்டின் முன், இரு மொபட்டுகளில், மூட்டைகளுடன் இருவர் நின்றனர். மூட்டைகளில் சோதனை செய்ததில், ரேஷன் அரிசி இருந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், 15 மூட்டை-களில், 75 கிலோ வீதம், 1,125 கிலோ ரேஷன் அரிசியை கடத்தவி-ருப்பது தெரிய வந்தது. மொபட்டுகளுடன் அரிசியை பறிமுதல் செய்தனர். மொபட்டுடன் நின்ற கருங்கல்பாளையம் லட்சுமண-குமார், கோணவாய்க்கால் சிவக்குமாரை கைது செய்தனர்.
23-Dec-2024