மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்ற 2 நாள் அவகாசம்
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட நாச்சியப்பா வீதி 1, 2, கே.வி.கே.வீதி, வாசுகி வீதி, அகில்மேடு 4, 5, 6, 7 வீதிகளின் இருபுறமும் ஆக்கிரமித்து வைத்துள்ள விளம்பர போர்டு, கடை முன்பகுதியை அகற்ற மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு வரும், ௧௪ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாவிடில், மாநகராட்சி நிர்வாகம் அகற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.