காவிரி ஆற்றில் விடப்பட்ட 2 லட்சம் மீன் குஞ்சுகள்
பவானி, பவானி சாகர் அணையில் இருந்து மீன் குஞ்சுகள் பெறப்பட்டு, பவானியில் காவிரி ஆற்றில் விடுவது வழக்கம். அந்த வகையில் பவானி கூடுதுறை காவிரி ஆற்றங்கரையோரத்தில், நாட்டின மீன் இனமான சேல் கொண்டை, ரோகு மீன் குஞ்சு தலா ஒரு லட்சம் என, இரண்டு லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. இதன் மூலம் அழிந்து வரும் நிலையில் உள்ள நாட்டின் மீன்களை பேணி பாதுகாத்து, உற்பத்தியை அதிகரிக்க செய்தல், மக்களுக்கு குறைந்த விலையில் புரதச்சத்து கிடைக்க வழிவகை செய்தல், உள்நாட்டு மீனவர்களின் வருவாயை கணிசமாக அதிகரித்திடுதல், மீன்கள் வாழ்விடம் சிதைவடைதல் தடுத்தல் உள்ளிட்ட பயன் கிடைக்கும் என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.