உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா கடத்திய 2 பேர் கைது

குட்கா கடத்திய 2 பேர் கைது

சத்தியமங்கலம்,:ஆசனுார் போலீசார், நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு சோதனைச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு பிக்-அப் வேனில், காலி ரேக்குகளுக்கு அடியில், 350 கிலோ குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து சத்தியமங்கலத்துக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வது தெரிந்தது. காரில் வந்த தாளவாடியை சேர்ந்த அப்துல் ஆரிப், 35, சையத் சிக்ரியா, 30, ஆகியோரை கைது செய்தனர். வேனுடன், 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை