உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி 20 ஆயிரம் லிட்டர் பால் வீணானது

மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி 20 ஆயிரம் லிட்டர் பால் வீணானது

சத்தியமங்கலம்: தாளவாடி மலையில் இருந்து பால் ஏற்றிய ஒரு டேங்கர் லாரி, பெருந்துறைக்கு நேற்று காலை புறப்பட்டது. ஊட்டியை சேர்ந்த வெங்கடாசலம், 38, ஓட்டினார். அவருடன் குளித்தலையை சேர்ந்த ரஜினி, 30, இருந்தார். திம்பம் மலைப்பாதையில் வந்தபோது, முதலாவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மலைப்பாதை தடுப்புச்சுவரை ஒட்டி சாலையில் கவிழ்ந்-தது. லாரியில் பயணித்த இருவரும் காயத்துடன் உயிர் தப்பினர். அதே-சமயம் டேங்கர் உடைந்து, அதில் கொண்டு வரப்பட்ட, ௨௦ ஆயிரம் லிட்டர் பால் சாலையில் வீணாக ஓடியது. இதனால் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை