200 மடங்கு வட்டி டிரைவரின் மனு குமுறல்
ஈரோடு, மே 20ரோடு, சோலார், மாணிக்கவாசகர் காலனி, இரணியன் வீதியை சேர்ந்தவர் தேவி குமாரி, 28; ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: எனது கணவர் கார்த்திக். எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கார்த்திக் டிரைவராக பணி செய்கிறார். வேலை செய்யும் நிறுவனத்தில் வாங்கிய கடனை அடைக்க ராஜா என்பவரிடம், 25,000 ரூபாய் கடன் பெற்றார். இதற்காக டூவீலர் ஆவணம், செக், ஒரிஜினல் ஆதார் கார்டு, வெள்ளை பேப்பரில் கையெழுத்திட்டு தந்தார். முதல் மாத வட்டி, 3,500 ரூபாயை கழித்துவிட்டு, 21,500 ரூபாயை வழங்கினார். ஐந்து மாதம் வட்டியை கொடுத்த நிலையில், மீதி தொகை, வட்டிப்பணத்தை வழங்கி, ஆவணங்களை கேட்டோம். இன்னும், 28,500 ரூபாய் கேட்டு மிரட்டுகிறார். 200 சதவீதம் வட்டி என்கிறார். அசல் தொகையை வழங்க தயாராக உள்ளதால், எங்கள் ஆவணங்களை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு கூறினார்.