உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு அலுவலர் குறைதீர் கூட்டத்தில் 21 மனு ஏற்பு

அரசு அலுவலர் குறைதீர் கூட்டத்தில் 21 மனு ஏற்பு

ஈரோடு, அரசு அலுவலர் குறைதீர் கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் ஈரோட்டில் நேற்று நடந்தது.பணியிட மாறுதல், பணி மாறுதல், பதவி உயர்வு, மருத்துவ காப்பீடு, செலவினம் உட்பட கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை, ஈரோடு மாவட்ட அரசு பணியாளர்களிடம் இருந்து பெற்று கொண்ட, தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரைத்தார்.அரசு அலுவலர், பணியாளர்களுக்கான இதுபோன்ற குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளி கிழமை மதியம், 3:00 மணிக்கு நடக்கும் என தெரிவித்தனர். நேற்றைய கூட்டத்தில், 21 பணியாளர்கள் மனு வழங்கினர். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, அலுவலக பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !