உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாவட்டத்தில் 3 போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு:இன்ஸ்பெக்டர்களும் பணியிட மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 3 போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு:இன்ஸ்பெக்டர்களும் பணியிட மாற்றம்

ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.,க்களால் செயல்பட்ட சிவகிரி, ஆப்பக்கூடல், வெள்ளி திருப்பூர் போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டு, இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்ட இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, கோவை சரக டி.ஐ.ஜி., சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஈரோடு சைபர் கிரைம் கவிதா லட்சுமி ஊத்துக்குளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கருங்கல்பாளையம் விஜயன் குன்னுாருக்கும், கடத்துார் ராம்பிரபு உடுமலை, காத்திருப்போர் பட்டியலில் இருந்த அரவிந்தராஜன் கடத்துாருக்கும், பாலமுருகன் பெருந்துறைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோபி மகளிர் ஸ்டேஷன் நாகமணி கோவை மாவட்ட குற்றப்பிரிவு, நீலகிரி நக்சல் தடுப்பு பிரிவு ஆனந்த் தாளவாடி, தாளவாடி வேல்முருகன் திருப்பூர் நக்சல் தடுப்பு பிரிவு, வெலிங்டன் மகாலட்சுமி பெருந்துறை மகளிர் ஸ்டேஷனுக்கும், காரமடை ஞானசேகரன் புளியம்பட்டிக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். புளியம்பட்டி கீதா நீலகிரி மாவட்ட குற்ற பதிவேடுகள் ஆவண பிரிவு, பவானி முருகைய்யன் காரமடை, பெருந்துறை தெய்வராணி பொள்ளாச்சி கிழக்கு, பொள்ளாச்சி கிழக்கு முருகன் ஈரோடு மாவட்ட குற்ற பதிவேடுகள் ஆவண பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மதுக்கரை நவநீத கிருஷ்ணன் பவானி, ஆனைமலை முத்துபாண்டி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு, வால்பாறை ஆனந்தகுமார் வெள்ளித்திருப்பூர், பேரூர் மகளிர் சுமதி பவானி மகளிர் ஸ்டேஷனுக்கும், பவானி மகளிர் கோமதி காங்கேயம் மகளிர் ஸ்டேஷனுக்கும், பெருந்துறை மகளிர் ஸ்டேஷன் ஜெயசுதா திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த பூர்ணசந்திர பாரதி, ஈரோடு சைபர் கிரைம் பிரிவுக்கும், கிருஷ்ணகுமார் சிவகிரிக்கும், சிவகார்த்திகா ஆப்பகூடலுக்கும், அந்தோணி ஜெகதா, கோபி மகளிர் ஸ்டேஷனுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.அதேசமயம் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை எஸ்.ஐ.,க்களால் நடத்தப்பட்ட சிவகிரி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர் போலீஸ் ஸ்டேஷன்களை தரம் உயர்த்தப்பட்டு, இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூண்டோடு மாறிய மதுவிலக்கு பிரிவுஈரோடு மாவட்ட மதுவிலக்கு பிரிவில் ஈரோடு, கோபியில் தலா ஒரு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த ஸ்டேஷன்களில் போலீஸ் முதல் எஸ்.ஐ., வரையிலானவர்கள் ஓராண்டுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்படுவர். இதன்படி ஏற்கனவே பணியாற்றிய, 47 போலீசார் மற்றும் எஸ்.ஐ.,க்கள் பதவி காலம் நிறைவு பெற்றது. தன் விருப்ப மாறுதல் விண்ணப்பம் பெற்று இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்ற விருப்ப மனு அளித்த போலீசாரின் மனு பரிசீலிக்கப்பட்டது. இதில், 37 போலீசார், எஸ்.ஐ.,களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஓரிரு நாட்களில் பணியில் சேர உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி