உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மண்டல விளையாட்டு போட்டியில் 30 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்பு

மண்டல விளையாட்டு போட்டியில் 30 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்பு

ஈரோடு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை, நாளை மறுதினம் நடக்கும், மண்டல அளவிலான தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டியில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 30 பேர் பங்கேற்க உள்ளனர்.இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் (டி.எப்.ஓ.,) முருகேசன் கூறியதாவது: இரண்டு நாட்கள் நடக்கும் போட்டியில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் என ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் ஈரோடு மாவட்ட தீயணைப்பு துறையில் இருந்து. 30 வீரர்கள் பங்கேற்கின்றனர். தீயணைப்பு துறை சார்ந்த தனி திறன் போட்டிகளான மீட்பு பணி போட்டி, கயிறு ஏறும் போட்டி, தீயணைக்கும் குழாய்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சும் முறை, அதனை கையாளும் வீதம், தந்திர கதம்பம் ஆகிய போட்டிகளும், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர், 400 மீ, 1,500 மீட்டர் ஓட்டம் போன்ற தடகள போட்டிகளும், கூடைபந்து, இறகுபந்து, வாலிபால் போன்ற குழு போட்டிகளும் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவோர் பிப்., மாதம் மதுரையில் நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை