மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 315 மனுக்கள் ஏற்பு
26-Aug-2025
குறைதீர் கூட்டத்தில் 175 மனுக்கள் ஏற்பு
02-Sep-2025
ஈரோடு, ஈரோட்டில் கலெக்டர் கந்தசாமி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மகளிர் உரிமைத்தொகை, போலீஸ் நடவடிக்கை, இலவச வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 318 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது.இலவச சலவை பெட்டி, 10 பேருக்கும், இலவச தையல் இயந்திரங்கள் இருவருக்கும், கருணை அடிப்படையில் ஒருவருக்கு சத்தி சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில் சமையலராக பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.மூத்தோர் தடகள போட்டியில் ஈரோடு மாவட்டம் சார்பில் ஈட்டி எறிதலில் முதலிடம், வட்டு எறிதலில் மூன்றாமிடம், உயரம் தாண்டுதலில் மூன்றாமிடம் பிடித்த ஆதிதிராவிடர் நலத்துறை இளநிலை பொறியாளர் மலர்விழி, தான் வென்ற பதக்கம், பாராட்டு சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Aug-2025
02-Sep-2025