மேலும் செய்திகள்
கடைகளில் சோதனை; பிளாஸ்டிக் கவர், பை பறிமுதல்
26-Feb-2025
33 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்மூன்று கடைகளுக்கு ரூ.16,000 அபராதம் ஈரோடு:ஈரோடு, திருநகர் காலனியில் உள்ள இரு மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட, 31 கிலோ பிளாஸ்டிக் கவர், கப்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஈரோடு திருநகர் காலனி பகுதியில் உள்ள மளிகை கடை, டீ கடை என 15க்கும் மேற்பட்ட கடைகளில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.சிவா எண்டர் பிரைசஸ், வாகீஸ் பிளாஸ்டிக் ஆகிய இரண்டு கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுகாதார ஆய்வாளர்கள், இரண்டு கடை உரிமையாளர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். ஈரோடு காவேரி சாலையில், வேல் மார்ட் என்ற மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
26-Feb-2025