உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 340 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 340 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, டிச. 24--ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, போலீஸ் நடவடிக்கை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 340 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.தலா, 1.20 லட்சம் ரூபாயில் கறவை மாடுகள் வாங்க, 13 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தலா, 50,000 ரூபாய் வீதம், 6.50 லட்சம் ரூபாய் மானியத்தொகை வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சக்திவேல், பயிற்சி ஆர்.டி.ஓ., சிவபிரகாசம் மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ