உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு, கடம்பூரில் கஞ்சாவைத்திருந்த 4 பேர் கைது

ஈரோடு, கடம்பூரில் கஞ்சாவைத்திருந்த 4 பேர் கைது

ஈரோடு:ஈரோடு, கனிராவுத்தர் குளம், காந்தி நகர் பகுதியில், டவுன் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கு இடமாக, ஈ.பி.பி.நகர் சரவணன், 38, சூளை, நெசவாளர் காலனி ரமேஷ், 36, திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், 1.1 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். * கடம்பூர் போலீசார் கடம்பூரை அடுத்த மாக்கம்பாளையம் செல்லும் வழியில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த மேட்டுப்பாளையம், சிறுமுகையை சேர்ந்த தினேஷ், 26, மேட்டுபாளையத்தை சேர்ந்த விக்னேஷ், 24, ஆகியோரிடம், 350 கிராம் கஞ்சா இருந்தது. இருவரையும் கைது செய்து, டூவீலருடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ