உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொடக்குறிச்சி பகுதியில் 3 வீடுகளில் திருடிய 4 பேர் கைது; 23 பவுன் மீட்பு

மொடக்குறிச்சி பகுதியில் 3 வீடுகளில் திருடிய 4 பேர் கைது; 23 பவுன் மீட்பு

ஈரோடு, மொடக்குறிச்சி பகுதி யில் ஒரே இரவில் மூன்று வீடுகளில் கைவரிசை காட்டிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.ஈரோட்டை அடுத்த சின்னியம்பாளையம் கரிய காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். துணி கடை வைத்துள்ளார். இவரது வீட்டின் அருகே வசித்தவர் வெங்காடசலம். ஈரோடு, சின்னியம்பாளையம், அரசு போக்குவரத்து நகரில் வசிப்பவர் மணி. மூவர் வீட்டிலும் கடந்த, ௧௪ம் தேதி இரவு ஒரே சமயத்தில் திருட்டு நடந்தது. இதில், 23 பவுன் தங்க நகை, பணம் திருடப்பட்டது. இதனால் மொடக்குறிச்சி பகுதி மக்கள் பீதி அடைந்தனர். மொடக்குறிச்சி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ஆனந்த், 23, குமார், 40, ஆகியோரிடம் விசாரித்தனர். திருட்டில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டதால் கைது செய்தனர். மேலும் மூவருக்கு தொடர்பு இருப்பதாக கூறினர். இருவரும் தந்த தகவலின்படி சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராஜன், 49, இவரது சகோதரர் சிவ விநாயகம், 42, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் பழங்குற்றவாளிகள். திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி, ஸ்கோடா கார் மற்றும் 23 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். திருட்டு தொடர்பாக உலகநாதன் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி