உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயத்தில் ஒரே இரவில் 4 கடைகளில் திருட்டால் பீதி

காங்கேயத்தில் ஒரே இரவில் 4 கடைகளில் திருட்டால் பீதி

காங்கேயம்: காங்கேயத்தில் கரூர் சாலையில் கோகுல் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று அதிகாலை, 3:00 மணி அளவில் கடையின் பூட்டை உடைத்து, 8,௦௦௦ ரூபாய் திருட்டு போனது. அருகில் உள்ள பத்திர எழுத்தர் சிவா கடை பூட்டை உடைத்து, 2,௦௦௦ ரூபாய் திருடியுள்ளனர். அருகிலுள்ள நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்துள்ளனர். பணம் ஏதும் கிடைக்கவில்லை. அங்கிருந்து சென்று, 100 மீட்டர் தொலைவில் உள்ள, ரத்தினமூர்த்தி என்பவரின் மொபைல் கடையில் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அருகிலிருந்த டீக்கடைகாரர் சத்தம் கேட்டு வந்ததால், கைவரிசையில் ஈடுபட்டிருந்த ஆசாமி, தயாராக நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் ஏறி மாயமாகி விட்டார். காங்கேயம் போலீஸ் ஸ்டேசனில் இருந்து, 300 மீட்டர் தொலைவில், இந்த திருட்டு நடந்துள்ளது. கடந்த, 10 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக, தொடர் திருட்டு நடந்துள்ளதால், கடைக்காரர்கள் பீதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி