உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாவட்டத்தில் ரூ.4.10 கோடி பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.4.10 கோடி பறிமுதல்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினர் சோதனையில், 4.10 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி கருங்கல்பாளையம் செக்போஸ்ட் பகுதியில் பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன் தலைமையிலான சோதனையில், காரில் வந்த சிவகுமாரிடம், ஒரு லட்சத்து, 64,600 ரூபாய்; வைராபாளையம் நால்ரோட்டில் அப்பாஸிடம், ஒரு லட்சத்து, 6,510 ரூபாய் பறிமுதல் செய்தனர்.ஈரோடு மேற்கில் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார் தலைமையில், லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் நடந்த சோதனையில், ரஹமத்துல்லா என்பவரிடம், 23 லட்சத்து, 47,300 ரூபாய்; நிலை கண்காணிப்பு குழு அதிகாரி மணி தலைமையில் லட்சுமி நகரில் நடந்த சோதனையில், உமர் என்பவரிடம், 70,000 ரூபாய் பறிமுதல் செய்தனர்.அதிகாரி திருநாவுக்கரசு தலைமையில் நசியனுார் பைபாஸ் சாலையில் நடந்த சோதனையில், விஜயகுமாரிடம், 73,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை, 73 லட்சத்து, 53,207 ரூபாய்; ஈரோடு மேற்கில், 1 கோடியே, 83 லட்சத்து, 52,202 ரூபாய்; மொடக்குறிச்சியில், 7 லட்சத்து, 82,670 ரூபாய்; பெருந்துறையில், 26 லட்சத்து, 89,615 ரூபாய்; பவானியில், 20 லட்சத்து, 20,300 ரூபாய்; அந்தியூரில், 4 லட்சத்து, 84,850 ரூபாய்; கோபியில், 24 லட்சத்து, 7,790 ரூபாய்; பவானிசாகரில், 69 லட்சத்து, 26,328 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.மாவட்ட அளவில் எட்டு தொகுதியிலும் சேர்த்து, 4 கோடியே, 10 லட்சத்து, 16,962 ரூபாய் மதிப்பில் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.உரிய ஆவணம் வழங்கியதால் ஒரு கோடியே, 81 லட்சத்து, 47,265 ரூபாயை விடுவித்துள்ளனர். மீதி, 2 கோடியே, 28 லட்சத்து, 69,697 ரூபாய், மாவட்ட கருவூலத்தில் இருப்பில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ