குரூப் 2 தேர்வில் 4,191 பேர் ஆப்சென்ட்
ஈரோடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி-2 தேர்வு நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி என நான்கு தாலுகாவில், 60 மையங்களில், 17,781 தேர்வெழுத விண்ணப்பம் செய்திருந்தனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக ஐந்து பறக்கும் படை நியமிக்கப்பட்டிருந்தது. தேர்வில், 13,590 பேர் மட்டுமே பங்கேற்றனர். 4,191 பேர் வரவில்லை. ஈரோடு தாலுகாவில், 1,799 பேர், பெருந்துறை தாலுகாவில், 526 பேர், கோபியில், 953 பேர், பவானியில், 913 பேர் தேர்வெழுதாமல் புறக்கணித்து விட்டனர்.