உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு

மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவ தேவைக்கு, 491 டன் விதைகள் இருப்பு உள்ளன. இதுபற்றி ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியது:மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்கு தேவையான நெல் விதை - 260 டன், சிறுதானியங்கள் - 61.3 டன், பயறு வகைகள் - 32.1 டன், எண்ணெய் வித்துக்கள் - 138.4 டன் என, 491.8 டன் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா - 4,002 டன், டி.ஏ.பி., - 2,284 டன், பொட்டாஷ் - 2,874 டன், காம்ப்ளக்ஸ் - 6,897 டன் இருப்பில் உள்ளன. இதன்படி நடப்பு பருவ சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விவசாயிகள் தேவையான இடுபொருட்களை அந்தந்த பகுதி வட்டார மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையங்களில் சென்று வாங்கலாம். இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை