உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தெருநாய் கடித்து 5 ஆடுகள் பலி

தெருநாய் கடித்து 5 ஆடுகள் பலி

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி சாஸ்திரி நகர் குமரன் நகரில் வசிப்பவர் தங்கவேல், 70; ஐந்து ஆடுகள் வளர்த்து வந்தார். வீட்டின் எதிரே மரத்தடியில் ஆடுகளை கட்டி வைத்திருப்பது வழக்கம். நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய்கள், ஆடுகளை கடித்து குதறியதில் ஐந்து ஆடுகளும் பலியாகின. தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள், பலியான ஆடுகளை குழி தோண்டி புதைத்து விடுமாறு அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி ஆடுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. தெருநாய்களால் ஐந்து ஆடுகள் பலியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை