உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 53 மாணவ, மாணவியர் திறனறி தேர்வில் தேர்ச்சி

53 மாணவ, மாணவியர் திறனறி தேர்வில் தேர்ச்சி

ஈரோடு: அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு, ஆண்டுதோறும் திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்று முதல் 1,000 இடங்களை பிடிப்போருக்கு, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம் இளநிலை பட்டப்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான திறனறித்தேர்வு கடந்த ஆக., மாதம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 3,325 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் ஈரோடு மாவட்டத்தில், 27 மாணவர், 26 மாணவியர் என, 53 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் எலைட் பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ