உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கேட்பாரற்ற பேக்கில் 60 கஞ்சா சாக்லேட்

கேட்பாரற்ற பேக்கில் 60 கஞ்சா சாக்லேட்

ஈரோடு, ஈரோடு வழியாக வரும் ரயில்களில், சமீப காலமாக போதை பொருட்களான கஞ்சா மற்றும் புகையிலை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இதனால் ஈரோடு மதுவிலக்கு போலீசார், அடிக்கடி சோதனையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் எஸ்.ஐ., துளசிமணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் ரோந்து சென்றனர். ரயில்வே ஸ்டேஷன் பஸ் நிறுத்தத்தில் ஒரு பேக் கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது, 320 கிராம் எடையில், 60 கஞ்சா சாக்லேட் இருந்தது. பையை வீசி சென்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை