உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு சந்தையில் 80 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு சந்தையில் 80 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், தேனி போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்கு மாடுகளை கொண்டு வந்தனர்.நேற்று, 6,000 ரூபாய் முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 22,000 ரூபாய் முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 23,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள், 65,000 ரூபாய் விலையில், கலப்பின மாடுகளும் விற்பனைக்கு கொண்டுவந்தனர்.தொடர் மழை, வெள்ளத்தால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்ததால், 80 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ