உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 65 ஆண்டுக்கு பின் 99 பேருக்கு கிடைத்த வீட்டுமனை பட்டா

65 ஆண்டுக்கு பின் 99 பேருக்கு கிடைத்த வீட்டுமனை பட்டா

குளித்தலை குளித்தலை அடுத்த நச்சலுார் தனியார் மண்டபத்தில் நேற்று, 65 ஆண்டுகளுக்கு பின், 99 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா பெற்று தந்த, மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் லதா சங்கர், பாலன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நங்கவரம் நகர தி.மு.க., செயலரும், முன்னாள் டவுன் பஞ்., துணைத் தலைவர் முத்து, அரசின் சாதனைகள் குறித்து பேசினார்.இந்நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர் பொன்னர் பேசுகையில்,'' நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் புதுப்பாளையம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், 65 ஆண்டுகளாக குடியிருந்து வருவோரின், வீட்டு மனைக்கு இலவச பட்டா கேட்டு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கவுன்சிலர் லதா சங்கர், நகர செயலாளர் முத்து, மாவட்ட பிரதிநிதி சங்கர் ஆகியோர் முயற்சியால், 99 வீடுகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா பெற்று தந்ததற்கு பாராட்டு,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை