மேலும் செய்திகள்
குடிசை வீடு எரிந்து சேதம்
26-May-2025
அந்தியூர்: அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே, சென்னம்பட்டி, சித்தாகவுண்டனுாரை சேர்ந்தவர் ராமசாமி, 50; கூலி தொழிலாளி. குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசிக்கிறார். மகள் சம்பூர்ணம், விறகு அடுப்பில் நேற்று சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் கூரையில் தீப்பற்றியது. அப்போது காற்றும் வீசியதால் தீ பரவி கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. அப்பகுதியினர் வீட்டிலிருந்த உடமைகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது.
26-May-2025