உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மதம் மாற மறுத்த காதலன் விஷம் குடித்த காதலி சாவு

மதம் மாற மறுத்த காதலன் விஷம் குடித்த காதலி சாவு

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், 25; அலங்கியத்தை சேர்ந்தவர் சர்புனிஷா, 21; இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர். ஓராண்டாக காதலித்து வந்தனர். இருவரது வீட்டுக்கும் விஷயம் தெரிந்தது. திருமணம் நடக்க வேண்டும் என்றால், ஸ்ரீதர் மதம் மாற பெண் வீட்டார் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு ஸ்ரீதர் குடும்பத்-தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சர்புனிஷா, நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து விட்டார். இதையறிந்த குடும்பத்தினர் தாராபுரத்தில் தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைகாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். அலங்கியம் போலீசார் விசா-ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி