உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாய் குறுக்கே சென்றதால் தடுமாறி விழுந்தவர் சாவு

நாய் குறுக்கே சென்றதால் தடுமாறி விழுந்தவர் சாவு

பவானி : அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 54. இவர் ஊராட்சிக்கோட்டை பேரேஜ் மின்சார வாரியத்தில் போர்மேனனாக பணிபுரிந்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு பணி முடிந்து பைக்கில் ஊராட்சிகோட்டையில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கோனேரிப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, நாய் குறுக்கே சென்றதால் சண்முகசுந்தரம் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.தலையில் அடிபட்ட சண்முகசுந்தரத்தை பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சண்முகசுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அம்மாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி