கெட்டுப்போன சிக்கனால் பூட்டப்பட்ட உணவகம்
கெட்டுப்போன சிக்கனால்பூட்டப்பட்ட உணவகம்தாராபுரம், நவ. 24-தாராபுரத்தில் வசந்தா ரோட்டில் உள்ள ஒரு பாஸ்ட் புட் கடையில், ஆசாத் அலி என்பவர், குடும்பத்துடன் நேற்று மாலை உணவருந்த வந்தார். சிக்கன் மேகி மற்றும் சான்ட்விச் சாப்பிட்ட போது குழந்தை திடீரென வாந்தி எடுத்ததால் அதிர்ச்சி அடைந்தார். உணவை முகர்ந்து பார்த்தபோது கெட்ட வாடை வந்தது. உடனடியாக சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது, கெட்டுப்போன கோழி இறைச்சி மற்றும் பழச்சாறு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து, ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். தகவலறிந்து தாராபுரம் போலீசார் சென்றனர். அதேசமயம் கடை முன் கூட்டம் கூடியதால், கடைக்காரர் தரப்பில் கடையை பூட்டி சென்றனர். தீபாவளி சமயத்தில்தான் கடை புதியதாக திறக்கப்பட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.நள்ளிரவில் பைக் விபத்து