உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலை, வனப்பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த சாலை

மலை, வனப்பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த சாலை

ஈரோடு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அந்தியூர், சத்திய-மங்கலம், தாளவாடி யூனியனில் வனப்பகுதி, மலைப்பகுதி சாலைகள், பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதுபற்றி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்கு-றிப்பில் கூறியதாவது: ஊரக பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு-களை மேம்படுத்தும் வகையில், கிராமப்புற சாலைகள் மேம்-பாட்டு திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என செயல்படுகிறது. இந்த வகையில் அந்தியூர், சத்தி, தாளவாடி வட்டாரங்களில் வனப்ப-குதி, மலைப்பகுதி சாலை, பாலம் அமைக்கும் பணி நடந்துள்-ளது. சத்தி, குத்தியாலத்துார் மற்றும் சக்கரைபாளையம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி, 6.59 கோடியில் முடிவுற்று பயன்பாட்டில் உள்ளது.பர்கூர் பஞ்., அணைப்போடு கிராமத்தில், 1.09 கோடி ரூபாயில் சாலை, நுாறு நாள் வேலை திட்டத்தில், 33.06 லட்சத்தில் தம்மு ரெட்டி கிராமத்தில், 420 மக்கள் பயன் பெறவும், ஒன்னகரை கிரா-மத்தில், 384 மக்கள் பயன்பெறும் வகையில் சாலைப்பணி முடிந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுபோல சோளகனை வனப்பகுதியில், 9.8 கி.மீ., சாலை, 10.50 கோடியில் நிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை